திருப்பூரில் 11 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர்: மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த 47 புதிய பேருந்துகளில் முதற்கட்டமாக 11 பேருந்துகளின் சேவையை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.

திருப்பூர்: மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த 47 புதிய பேருந்துகளில் முதற்கட்டமாக 11 பேருந்துகளின் சேவையை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழக அரசால் வழங்கப்பட்ட புதிய பேருந்துகளின் தொடக்க விழா இன்று திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்திற்கு  47 புதிய பேருந்துகள் ஒதுக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக இன்று 11 பேருந்துகள் மட்டும் மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டது.



இந்த சேவையை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகள் திருப்பூரில் இருந்து திருச்சி, சேலம், கோவை, மதுரை மற்றும் பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. மேலும், மூன்று பேருந்துகள் அண்டை மாநிலமான கேரளாவுக்கு இயக்கப்படுகிறது.



நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்." என்று தெரிவித்தார்.



Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...