டெல்லி ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஜனநாயகத்திற்கு அவசியமானது : கோவையில் தம்பிதுரை பேட்டி

கோவை: டெல்லி அரசில் ஆளுநருக்கு தனித்துவமான அதிகாரம் கிடையாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கோவை: டெல்லி அரசில் ஆளுநருக்கு தனித்துவமான அதிகாரம் கிடையாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வரவேற்பு தெரிவித்துள்ளார். 

டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து, தீர்ப்பளித்துள்ளது. அதில், அரசியல் சாசனத்தை மதிக்கும் படியே நிர்வாகங்களின் செயல்பாடு இருக்க வேண்டும். கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது, எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இது ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி என டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், டெல்லி ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்திற்கும், இந்த நாட்டிற்கும் என்ன தேவையோ, அதன் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது. பேரறிஞர் அண்ணா ஆளுநர் பதவி தேவையா என்று கேட்டுள்ளார். ஆளுநருக்கு உட்பட்ட அதிகார வரம்பிற்குள் செயல்பட்டால் பிரச்சினை இல்லை. ஆளுநரின் ஆய்வைப் பற்றி குறை ஏதும் சொல்லவில்லை," என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...