நீலகிரி: குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் சென்ற நீலகிரி மலை ரயில் என்ஜினில் ஏற்பட்ட பழுதால் காட்டேரி பகுதியில் நின்றது. பயணிகள் பேருந்துகள் மூலம் மேட்டுப்பாளையம் அனுப்பப்பட்டனர்.
நீலகிரி: குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் சென்ற நீலகிரி மலை ரயில் என்ஜினில் ஏற்பட்ட பழுதால் காட்டேரி பகுதியில் நின்றது. பயணிகள் பேருந்துகள் மூலம் மேட்டுப்பாளையம் அனுப்பப்பட்டனர்.
நீலகிரி மலை ரயில் தினமும் மதியம் 3.30 மணிக்கு குன்னூரிலிருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்லும். இந்நிலையில், நேற்று மதியம் குன்னூரிலிருந்து புறப்பட்ட மலை ரயில் காட்டேரி பகுதிக்கு அருகே சென்ற போது, அங்குள்ள பாலத்தில் என்ஜின் பழுதாகி நின்றது.
உடனடியகாக ரயில்வே ஊழியர்கள் குன்னூரிலிருந்து வரவழைக்கப்பட்டனர். ஆனால், பழுதை சரி செய்ய கால தாமதமானதால், ரயில்வே நிர்வாகம் உடனடியாக பேருந்துகளை ஏற்பாடு செய்தது. இதனால், ரயிலில் பயணித்த 165 பயணிகள் ரயிலிலிருந்து இறக்கப்பட்டு மூன்று பேருந்துகளில் மேட்டுப்பாளையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ரயிலில் பயணித்த ஒரு கர்ப்பிணி பயணிக்கு கார் ஏற்பாடு செய்யப்பட்டு மேட்டுப்பாளையத்துக்கு அனுப்பப்பட்டார். மேலும், தற்காலிகமாக பழுது சரி செய்யப்பட்டு, அந்த ரயில் இரவு 7 மணியளவில் காட்டேரிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு புறப்பட்டது.
தற்போது ஏற்பட்ட கோளாறு காரணமாக மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.