கோவை: கோவை குற்றால நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசுவதால் அங்கு குளிக்க தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
கோவை: கோவை குற்றால நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசுவதால் அங்கு குளிக்க தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழையால் கோவை குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க கடந்த வாரத்திற்கு முன்பாக 11 நாட்கள் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மழை குறைவு காரணமாக கடந்த 6 நாட்களுக்கு முன்பு குற்றாலம் மீண்டும் திறக்கப்பட்டது.
இந்த சூழலில், அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை தொடர்வதாலும், அருவியையொட்டிய பகுதிகளில் பலத்த காற்று வீசுவதாலும், மீண்டும் கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.