அதிகாரிகள் ரெய்டு: கோவையில் விற்பனைக்கு வைத்திருந்த பான்மசாலா, கலப்பட டீ தூள் பறிமுதல்

கோவை: கோவையில் உணவு பாதுகப்புத்துறை அதிகாரிகள் இன்று நடத்திய சோதனையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பான்மசாலா மற்றும் கலப்பட டீ தூள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கோவை: கோவையில் உணவு பாதுகப்புத்துறை அதிகாரிகள் இன்று நடத்திய சோதனையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பான்மசாலா மற்றும் கலப்பட டீ தூள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள வணிக வளாகங்கள், பழக்கடைகள் மற்றும் குளிர்பான விற்பனையகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

அவ்வாறு சோதனையின் போது தடைசெய்யப்பட்ட பொருட்கள், கலப்பட பொருட்கள் மற்றும் காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். கடந்த வாரம் அன்னூர் பகுதியில் நடத்திய சோதனையில் பிரபல சமையல் எண்ணெய் பெயரில் இயங்கி வந்த போலி எண்ணெய் நிறுவனத்தில் அதிரடி சோதனை செய்து நடவடிக்கை எடுத்தனர். 



இந்த நிலையில், இன்று உணவு பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் எட்டு அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து சூலூர் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். 

அங்குள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் நடத்திய சோதனையின் போது, 1.4 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட குட்கா மற்றும் பான்மசாலா, கலர் சில்லி பவுடர்கள், இரண்டு கிலோ கலப்பட டீ தூள், சேதமடைந்த பிஸ்கட்டுகள் மற்றும் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும், இந்த பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 27 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்த சோதனையானது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...