தி.மு.க ஆட்சி அமைந்தால் எடப்பாடி பழனிசாமி சிறை செல்வது உறுதி - மு.க.ஸ்டாலின்

தி.மு.க ஆட்சி அமைந்தால், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் சிறை செல்வது உறுதி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தி.மு.க ஆட்சி அமைந்தால், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் சிறை செல்வது உறுதி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தி.மு.க சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் மாநில, மாவட்ட அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், தி.மு.க வைப் பொறுத்தவரையில் தமிழகத்தை 65 மாவட்டங்களாகப் பிரித்து வைத்திருக்கிறோம். அந்த 65 மாவட்டங்களில் நான்கு பேர் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, சிறுபான்மையினருக்குத் தகுந்த மரியாதையை வழங்க தி. மு.க தவறியதில்லை. மதியம் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் துணைவியார் உடல்நலம் குறித்து விசாரிக்கச் சென்றபோது, அவர் அன்பின் மிகுதியில், ``அடுத்த முறை வரும்போது முதலமை‌ச்ச‌ராகதான் வரணும்" என்றார்.

மேலும், ஒவ்வொரு அ.தி.மு.க அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு மாதந்தோறும் கமிஷன் வகையில் 10 கோடி ரூபாய் வரை பணம் கிடைக்கிறது. மேலும், நிறைய கல்லூரிகள் மற்றும் இடங்களை வாங்கிக் குவித்து வருகிறார்கள் என்கிற செய்திகள் வருகின்றன. அடுத்து தி.மு.க ஆட்சிக்கு வரும்போது எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் சிறை செல்வார்கள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் 4 பேர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு விவரம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...