தி.மு.க ஆட்சி அமைந்தால், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் சிறை செல்வது உறுதி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தி.மு.க சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் மாநில, மாவட்ட அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், தி.மு.க வைப் பொறுத்தவரையில் தமிழகத்தை 65 மாவட்டங்களாகப் பிரித்து வைத்திருக்கிறோம். அந்த 65 மாவட்டங்களில் நான்கு பேர் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, சிறுபான்மையினருக்குத் தகுந்த மரியாதையை வழங்க தி. மு.க தவறியதில்லை. மதியம் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் துணைவியார் உடல்நலம் குறித்து விசாரிக்கச் சென்றபோது, அவர் அன்பின் மிகுதியில், ``அடுத்த முறை வரும்போது முதலமைச்சராகதான் வரணும்" என்றார்.
மேலும், ஒவ்வொரு அ.தி.மு.க அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு மாதந்தோறும் கமிஷன் வகையில் 10 கோடி ரூபாய் வரை பணம் கிடைக்கிறது. மேலும், நிறைய கல்லூரிகள் மற்றும் இடங்களை வாங்கிக் குவித்து வருகிறார்கள் என்கிற செய்திகள் வருகின்றன. அடுத்து தி.மு.க ஆட்சிக்கு வரும்போது எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் சிறை செல்வார்கள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் 4 பேர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு விவரம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.