புதிய டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம்

திருப்பூர்: திருப்பூர் அருகே புதிய டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே புதிய டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருப்பூர் மாநகராட்சி 11-வது வார்டுக்குட்பட்ட லட்சுமி தியேட்டர் சாலையில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, நேற்று கடையில் பூஜை செய்யப்பட்டதுடன், மதுபாட்டில்களும் லாரியில் இருந்து வந்து இறங்கியது. இதையறிந்த அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., த.மா.கா., பா.ஜ.க., கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட கடை முன்பு திரண்டனர்.

பின்னர், அவர்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அனைவரும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தை நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த டாஸ்மாக் அதிகாரி மற்றும் 15 வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து, அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். 3 மணி நேரம் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...