மேட்டுப்பாளையம்: பழுதாகிய தெரு விளக்கை சரி செய்யாத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மேட்டுப்பாளையத்தில் நேற்று மின் கம்பத்தில் தீ பந்தம் ஏந்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

கோவை மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 22 வார்டில் உள்ள போரே கவுடர் வீதி பகுதியில் சுமார் 14 மின் கம்பங்கள் உள்ளது. அதில் உள்ள மின் விளக்குகள் பழுது ஏற்பட்டு எரியவில்லை. இது குறித்து, அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நேற்று மாலை நகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து அந்த பகுதியினை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட 14 மின் கம்பங்களில் தீ பந்தம் ஏற்றி நூதன போராட்டம் நடத்தினர்.