திருப்பூர்: காங்கேயம் அருகே சமையல் செய்த போது எதிர்பாராத விதமாக வீட்டில் தீப்பிடித்த விபத்தில் மூதாட்டி ஒருவர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

கீரனூர் கிராமம் சென்னிமலைபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வாத்தாள் (67). இவருடைய கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்ததைத் தொடர்ந்து, இவர் மட்டுமே தனியாக தென்னங்கீற்றினால் வேயப்பட்ட வீட்டில் குடியிருந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று பகல் 12 மணியளவில் தெய்வாத்தாள் வீட்டில் உள்ள விறகு அடுப்பை பற்ற வைத்து சமையல் செய்த போது எதிர்பாராத விதமாக வீட்டின் தென்னங்கீற்றில் நெருப்பு பட்டது. இதைத் தொடர்ந்து தீ பற்றி எரிந்தது. பலத்த காற்று வீசியதால் வீடு முழுவதும் தீயில் கருகியது.
இந்த தீயில் இருந்து தப்பிக்க முடியாத தெய்வாத்தாள் வீட்டினுள்ளேயே உடல் கருகி பரிதாபமாக பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.