கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலி : முதற்கட்டமாக ரூ. 50,000 இழப்பீடு

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

கூடலூரை அடுத்த வாச்சகொல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்னன் (48). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலை பணி முடித்து பாடந்துரை பஜாரில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு இரவு 7 மணியளவில் தனியாக வீடு திரும்பியுள்ளார். சுண்ட வயல் பகுதியில் சென்ற போது, அங்கு வந்த காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இவர், இறந்த விபரம் யாருக்கும் தெரியாத நிலையில், மறுநாள் காலையில் அந்த வழியாக வந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் பார்த்து கிராம மக்களுக்கு தகவல் அளித்துள்ளார்.



பின்னர், வனத்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த வனத்துறையினரிடம் கிராமவாசிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ராதாகிருஷ்ணனின் உடலை எடுத்துச் செல்லவிடாமல் தடுத்தனர். யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை சமாதானப்படுத்திய வனத்துறையினர் மற்றும் போலீசார், உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, காட்டு யானை தாக்கியதில், உயிரிழந்த ராதாகிருஷ்ணனின் மனைவிக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்கப்பட்டது. 

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...