உதகையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை ஒன்பதாக உயர்வு

நீலகிரி: உதகையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலியாகிய நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பேருந்தின் நடத்துனர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

நீலகிரி: உதகையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலியாகிய நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பேருந்தின் நடத்துனர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

ஊட்டியில் இருந்து நேற்று 12 பெண்கள் உட்பட 34 பயணிகளுடன் குன்னூரை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து மதாடா பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்த 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 28 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திகற்கு சென்ற கேத்தி போலீசார், மீட்புப் பணியில் ஈடுபட்டு படுகாயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் உதவியுடன் உதகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.

அங்கிருந்து அல்மஷ் (29) என்ற பெண் உட்பட 16 பேர் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, நேற்று இரவு மேலும் ஒரு நபர் உயிரிழந்த நிலையில் இன்று அதிகாலை பேருந்தின் நடத்துனர் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி பலியானார்.

தற்போது, பலி எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...