கோவை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில் நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "கோவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்புள்ளது.
இதனிடையே, பகல் நேர வெப்ப நிலையானது 28 முதல் 29 டிகிரி செல்சியஸ்-ஆகவும், இரவு நேர வெப்ப நிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸ்-ஆகவும் நிலவ வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் 10 முதல் 12 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது. விவசாயிகள் பயிர் அறுவடைகளை சற்று தள்ளிப்போடுவது நல்லதாக இருக்கும்.
கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தீவிரமடையும் மழையால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. வால்பாறை, சிறுவாணி போன்ற பகுதிகளில் 20 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது.
மழை காரணமாக தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதால் விவசாய நிலங்களில் வடிகால் அமைப்பது நல்லது. திராட்சை, மஞ்சள் போன்ற விவசாயத்தில் தற்போது பூச்சி தாக்க வாய்ப்புள்ளது தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் அரிமானம் ஏற்பட்டு நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளது. எனவே கவனமுடன் இருக்க வேண்டும்." என்றார்.