திருப்பூர்: தென்மேற்கு பருவமழை காரணமாக திருப்பூர் நொய்யல் நதியில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில், அதில், சாயக்கழிவுகள் கலக்காதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தென்மேற்கு பருவமழையின் காரணமாக நதியில் தற்போது வெள்ளம் பெருகி வருகிறது. வறண்டே கிடந்த அன்னை, வற்றாத காட்டாற்று வெள்ளம் போல் பாய்வதைக் கண்ட திருப்பூர் மக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதே நேரத்தில், சாயக்கழிவு ஆலை உரிமையாளர்களும் 'குஷி'யில் உள்ளனர். காரணம், இது போன்ற நேரத்தில் தான், சாய ஆலையில் இருந்து சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவுகளை, இரவு நேரங்களில் நதியில் கலந்து விடுவர்.
கடந்த முறை இதே போன்று சாயக்கழிவுகளை நதியில் கலந்த காரணத்தால், நுரையுடன் சென்ற ஆற்று நீர் யாருக்கும் பயன்படாமல் போனது.
எனவே மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய முறையில் கண்காணித்து, நொய்யலில் சாயக்கழிவுகள் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.