நீலகிரியில் 19 வகை, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: மீறினால் அபராதம்

நீலகிரி: மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.


நீலகிரி: மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார். 



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும் அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் நான்கு நகராட்சிகள், 11 பேரூராட்சி மற்றும் 35 ஊராட்சிகள் அடங்கிய அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், தீர்மானங்கள் இயற்றப்பட்டு, நீலகிரி மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு, எண் இரண்டில் கடந்த மே 9-ம் தேதி வெளியிடப்பட்டது. 

அதன்படி, 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டது. இம்மாவட்டத்தில், அனைத்து தடிமனாலான பிளாஸ்டிக் பைகள், ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் கப்புகள், ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் டம்ளர்கள், கரண்டிகள், கத்திகள், முள் கரண்டிகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், காகித கப்புகள், காகித டம்ளர்கள், பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் முலாம் பூசப்பட்ட காகித தட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



இதை தவிர, ஸ்டைலோபோம், தெர்மாகோல் தட்டுகள் மற்றும் பிறவகை தெர்மாகோல், நெய்யப்படாத வகையிலான பைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் சமையலர் தொப்பிகள், பிளாஸ்டிக் கையுறைகள், பிளாஸ்டிக் குடிநீர் பாக்கெட்டுகள், சில்வர் பூச்சு கொண்ட பைகள், பிளாஸ்டிக் பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள், பூச்செண்டுகள் மற்றும் பரிசு பொருட்கள் சுற்றப் பயன்படும் பிளாஸ்டிக்குகள், லாமினேஷன் செய்யப்பட்ட காக்கி தாள்கள், லாமினேஷன் செய்யப்பட்ட பேக்கரி அட்டை பெட்டிகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவ தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்களும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதனை மீறுபவர்களிடம் வசூலிக்கப்படும் அபராதம் விவரம்:-

சில்லரை விற்பனையாளர்கள் அரை கிலோ பிளாஸ்டிக் வைத்திருந்தால் அபராதம் ரூ.1,000, மொத்த விற்பனையாளர்களுக்கு அரை கிலோ வரை ரூ.5,000, திருமண மண்டபங்களுக்கு அரை கிலோ வரை ரூ. 20 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்படும்.

மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் அனைத்து தரப்பினரும், இந்த அறிவிப்பை பின்பற்றி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல், சுற்றுச் சூழலை பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...