நீலகிரி : உதகை நகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த கட்டிடங்கள் மற்றும் விடுதிகளுக்கு நகராட்சி ஊழியர்கள் அதிரடியாக சீல் வைத்தனர்.
நீலகிரி : உதகை நகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த கட்டிடங்கள் மற்றும் விடுதிகளுக்கு நகராட்சி ஊழியர்கள் அதிரடியாக சீல் வைத்தனர்.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் கான்கீரிட் கட்டிடங்கள் கட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன. இந்த நிலையில், 1,330 கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், அனுமதியின்றி கட்டப்பட்ட 1.330 கட்டிடங்களை மாஸ்டர் பிளான் சட்டம் மூலமாக இடிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து, கட்டிடங்களை இடிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், உதகை நகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில், நகரமைப்பு அலுவலர் மீனாட்சி தலைமையில் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள தனியார் விடுதிகளுக்கு நகராட்சி ஊழியர்கள் இன்று சீல் வைத்தனர்.