கோவை: மேட்டுப்பாளையம் அருகே மான் இறைச்சியை விற்பனை செய்து வந்த 4 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

மேட்டுப்பாளையத்தை யடுத்த வெள்ளியம்பாளையம் சாலை அருகே அபிலா எனும் பி. பிரேமா (27) என்பவர் வீட்டில் மான் இறைச்சி வைத்து விற்பனை செய்வதாக நேற்று தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக சோதனை நடத்திய வனத்துறையினர் பிரேமாவைக் கைது செய்தனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (23) என்பவரிடம் மான் இறைச்சியைப் பெற்று, அதனை விற்று பணத்தை பங்குப் போட்டுக் கொள்வது தெரியவந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்து வந்த ராஜ்குமாரை வனத்துறையினர் இன்று அதிகாலை கைது செய்தனர். அப்போது, ஆற்றங்கரையோரம் சுற்றித் திரியும் மான்களை நாய்களைக் கொண்டு வேட்டையாடி இறைச்சியை எடுத்து வந்து விற்பனை செய்வதை ஒப்புக்கொண்டார். மேலும், மான் இறைச்சியை விற்பனை செய்ததாக ஜி. பிரேமா (28), கே. நஞ்சம்மாள் (74) ஆகியோரும் பிடிபட்டனர்.

அவர்களில்,வீட்டில் மான் இறைச்சி வைத்திருந்த குற்றத்திற்காக அபிலா மற்றும் ராஜ்குமாருக்கு தலா ரூ. 20,000-மும், பிரேமா மற்றும் நஞ்சம்மாளுக்கு ரூ. 5,000-மும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவர்களிடம் இருந்து 4 கிலோ மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.