புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மலைவாழ் இளைஞர்களுக்கான வாலிபால் போட்டி

கோவை : மலைவாழ் இளைஞர்களுக்கு இடையே புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காளம்பாளையத்தில் வாலிபால் போட்டிகள் நடத்தப்பட்டன.

கோவை : மலைவாழ் இளைஞர்களுக்கு இடையே புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காளம்பாளையத்தில் வாலிபால் போட்டிகள் நடத்தப்பட்டன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து காளம்பாளையம், அண்மையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியாக மாற்றப்பட்டது. இந்த நிலையில், மலைவாழ் இளைஞர்களுக்கு இடையே புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காளம்பாளையத்தில் 'வாலிபால் ஃபர் டைகர்ஸ்' என்ற வாலிபால் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. உலகளாவிய இயற்கை நிதியம் கோவையைச் சேர்ந்த உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து 2 நாட்கள் நடக்கும் இந்தப் போட்டியில், ஆனைக்கட்டி, புதுக்காடு, ஹலிமோயர், காளம்பாளையம் மற்றும் தெங்குமராடா உள்ளிட்ட பகுதிகளைடச் சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றன. 



இதில், ஆனைகட்டி அணி முதல்பரிசு மற்றும் ரூ. 5,000 ரொக்கப்பரிசையும் கைப்பற்றியது. காளம்பாளையம் 2-வது பரிசை வென்றது. 



"மிக முக்கிய வனப்பகுதிகளில் மோயர் பள்ளத்தாக்கும் ஒன்றாகும். புலிகள் பாதுகாப்பிற்கு அங்கு வசிக்கும் மக்களின் பங்களிப்பு இன்றியமையாதது. வாலிபால் போட்டியானது, மலைவாழ் மக்களின் மாலைநேர விளையாட்டாகும்," இவ்வாறு ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர். 

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...