கோவை : அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சரணடையாது என அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கோவை ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் மாநில குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:- பிரதமர் மோடியின் 4 ஆண்டு ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பயனடைந்துள்ளது. அதேசமயம், அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டது.
பிரதமர் மோடிக்கு மாவோயிஸ்ட்டுகளால் அச்சுறுத்தல் இருப்பதாகக் கடிதம் கைப்பற்றப்பட்டதில், முரண்பாடுகள் உள்ளன. மதச்சார்பின்மை, ஜனநாயகத்தைப் பாதுகாக்க நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பா.ஜ.க.,வை வீழ்த்துவோம். ஆனால், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி தலைமை எங்களுக்கு தேவையில்லை. தலைவர்களை விட கொள்கைகளே மாற்றத்தை ஏற்படுத்தும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸிடம் சரணடையாது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், அ.தி.மு.க., அரசு பா.ஜ.க.,வின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் இணை செயலாளர்களாக தனியார் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை நியமிக்கலாம் என்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் உள்ளவர்களைக் கொண்டு வர முயற்சி நடக்கிறது, இவ்வாறு அவர் கூறினார்.