மேட்டுப்பாளையத்தில் ரத்தம் சொட்ட சொட்ட சுற்றித்திரியும் காட்டுயானை

கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் காட்டு யானை ஒன்று படுகாயங்களோடு ரத்தம் சொட்ட சொட்ட ஆக்ரோசமாக சுற்றித் திரிவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் காட்டு யானை ஒன்று படுகாயங்களோடு ரத்தம் சொட்ட சொட்ட ஆக்ரோசமாக சுற்றித் திரிவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சமயபுரம் என்ற பகுதியில் நேற்று நள்ளிரவு உடலில் பலத்த காயங்களோடு காட்டு யானை ஒன்று பலத்த பிளிறல் சப்தத்தோடு சுற்றி வருவதைக் கண்ட மக்கள் இது குறித்து மேட்டுப்பாளையம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதனிடையே, அங்குள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்த காயம்பட்ட யானை வலியால் ஏற்பட்ட கோபம் காரணமாக அங்கிருந்த ஒரு மரத்தை சாய்த்தது. மேலும், ஆக்ரோஷத்தோடு அங்கும் இங்கும் பிளிறியபடி ஓடியது. இதனால் அத்தோட்டப் பகுதி முழுவதுமே யானையின் ரத்தக்கரையாக காட்சியளிக்கின்றது. 



தகவல் கிடைத்து வனத்துறையினர் வரும் முன்பே காயம் பட்ட யானை அங்குள்ள தென்னை மற்றும் பாக்கு தோட்டங்களை கடந்து அருகில் உள்ள புதர்க்காட்டு பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து, இன்று காலை மீண்டும் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்திய பின்பு யானையின் ரத்த சிதறல்களை பின்தொடர்ந்து சென்றனர். 

இதன் மூலம் அந்த யானை, அருகில் உள்ள நெல்லிமலையடிவார வனப்பகுதிக்குள் யானை சென்றுள்ளதை உறுதிசெய்துள்ள வனத்துறையினர், உடலில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளதால் வேதனையில் தவிக்கும் யானையின் அருகே செல்வது ஆபத்து என்பதால் தற்போது வரை அதன் நடமாட்டத்தை மட்டும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

யானைகளின் இனப்பெருக்க கால நேரங்களில் பெரிய யானைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு கொள்வது வழக்கம் என்பதால், இதன் காரணமாக இந்த யானை காயமடைந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என யானையின் காயங்களை பரிசோதித்த பின்னரே தெரிய வரும் என்கின்றனர் வனத்துறையினர். 

காயமடைந்து உயிருக்குப் போராடும் யானைக்கு சிகிச்சை அளிக்க இயலுமா? என முயற்சி மேற்கொள்ளும் வனத்துறையினர், இந்த யானை மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடாமல் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...