பில்லூர் அணை திறப்பால் வெள்ளப் பெருக்கு: பவானி ஆற்றின் கரையோர பாதுகாப்பு குறித்து கோவை ஆட்சியர் ஆய்வு

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை திறக்கப்பட்டுள்ளதால், பவானி ஆற்றின் கரையோரப் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டார்.

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை திறக்கப்பட்டுள்ளதால், பவானி ஆற்றின் கரையோரப் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டார்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழைக் காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை தனது முழு கொள்ளளவான 100 அடியில் 98 அடி வரை நிரம்பியது. இதனால், பாதுகாப்பு கருதி அணை நேற்று திறக்கப்பட்டது. அணையில் இருந்து சுமார் 8,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனையடுத்து, பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் சிறுமுகை, ஒடந்துரை, ஆலாங்கொம்பு, வச்சினம்பாளையம், நெல்லித்துரை உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நேற்று மாலை மேட்டுப்பாளையம் சென்ற கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், வெள்ளபெருக்கு காரணமாக வருவாய்த்துறை எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆற்றுப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். ஓடந்துரை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், இரவு முழுவதும் தண்ணீரின் அளவைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், தொடர்ந்து மக்களுக்கு ஒலிபெருக்கிகள் மற்றும் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...