கோவை: கோவை மற்றும் நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கோவை: கோவை மற்றும் நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகள், கோவை மற்றும் நீலகிரியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. கோவையைப் பொறுத்த வரையில் மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. ஆனால், நீலகிரி மாவட்டத்தில் பகல் நேரத்திலும் கனமழை பெய்து வருகிறது.
நேற்று மட்டும், அவலாஞ்சியில் 285 மி.மீ, அப்பர் பவானியில் 206 மி.மீ, எமரால்டு 94 மி.மீ, தேவாலா 67 மி.மீ, கூடலூர் 64 மி.மீ, உதகமண்டலம் 47 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால், அம்மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. குந்தா, எமரால்டு, அப்பர் பவனி உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
நீலகிரியில் மழை பாதிப்புகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஹெல்ப்-லைன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
0423-2223828, 0423-2223807, என்ற எண்களுக்குத் தொடர்பு கொண்டும், 8608000100 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணிலும் மழை பாதிப்பு மற்றும் நிலச்சரிவு புகார்களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.