வால்பாறையில் கன மழை தமிழக கேரள சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை: வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் சாலைகளில் மண் சரிந்து சேதமடைந்தன.

வால்பாறை: வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் சாலைகளில் மண் சரிந்து சேதமடைந்தன.

மழை காரணமாக வால்பாறை நகரை ஒட்டிச் செல்லும் நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணி பாதிப்படைந்தது.



சிறுவர் பூங்கா பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. மேலும், நகராட்சி சுற்றுலா மாளிகையை வெள்ளம் சூழ்ந்தது. வால்பாறையிலிருந்து சோலையார் அணை வழியாக கேரள செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நேற்று காலை 11 மணியளவில் வறட்டுப்பாறை என்ற இடத்தில் கொண்டை ஊசி வளைவு அருகே மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக மேற்பகுதியில் இருந்து ராட்சத மரங்கள் மற்றும் ராட்சத பாறைகள் சாலையில் விழுந்தன. மேலும், ஏராளமான மண் மற்றும் கற்கள் சாலையின் மேல் விழுந்து சாலையை மூடின.



வார இறுதி நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் இச்சாலையில் சென்ற வண்ணம் இருந்தன. இருப்பினும் மண் சரிவு ஏற்பட்ட நேரத்தில் வாகனங்கள் செல்லாததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. இதே போல் சோலையார் அணைக்குச் செல்லும் மாற்றுப்பாதையான பன்னிமேடு சாலையிலும் மண் சரிவு ஏற்பட்டதால் சோலையார் அணை பகுதி பல மணி நேரம் வால்பாறையிலிருந்து துண்டிக்கப்பட்டது.

இதனால் மக்கள் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறையினர் ஜே.சி பி மூலம் சாலையில் கிடக்கும் மண் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...