கோவை: கோவையில் தொழில்துறையில் சிறந்து விளங்கிய சி.ஆர்.ஐ., பம்ப் நிறுவனத்திற்கு 'ஸ்டார் பெர்ஃபாமர் விருது' வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.

மாவட்டத்தில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு, பொறியியல் ஏற்றுமதி ஊக்குவிப்பு சபையின் சார்பில் விருது ஆண்டுதோறும்வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2016-2017-ம் ஆண்டுக்கான ஸ்டார் பெர்ஃபாமர் விருதை சி.ஆர்.ஐ., பம்ப் நிறுவனம் பெற்றது. இந்த விருதை மத்திய மாநில வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சி.ஆர். சவுத்ரி, சி.ஆர்.ஐ., பம்ப் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துணைத் தலைவர் ஆர். பூபதியிடம் வழங்கினார். இது அந்நிறுவனத்திற்கு 14-வது விருதாகும்.
இது தொடர்பாக, விருதை பெற்ற பூபதி கூறுகையில்," தொழில்துறையில் அர்ப்பணிப்பையும், செயல்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு எங்களுக்கு விருது வழங்கி அங்கீகாரம் கொடுக்கும் பொறியியல் ஏற்றுமதி ஊக்குவிப்பு சபையின் செயல் மகிழ்ச்சியளிக்கிறது. சி.ஆர்.ஐ., பம்ப் நிறுவனம் பழமை வாய்ந்தது. உலகளவில் நீர் மேலாண்மையில் பங்களித்து வருகிறோம்," என்றார்.