கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட காடுகளில் இன்று முதல் புலிகள் கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளது

கோவை: இந்திய அளவில் தேசிய புலிகள் கணக்கெடுப்பு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது வழக்கம். அதன்படி, தற்போது கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட காடுகளில் புலிகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது.


கோவை: இந்திய அளவில் தேசிய புலிகள் கணக்கெடுப்பு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது வழக்கம். அதன்படி, தற்போது கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட காடுகளில் புலிகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. கோவை வனக்கோட்டம், 670 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அடர்ந்த காடுகளை கொண்டது. இதில், கோவை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, பெரியநாயக்கன்பாளையம், போளுவாம்பட்டி மற்றும் மதுக்கரை என மொத்தம் ஏழு வனச்சரகங்கள் உள்ளன. 



இயற்கை ஏழில் மிகுந்த இப்பசுமை காடுகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை என ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. 

மொத்தம் 48 பீட்டுகளில் நடக்கும் இக்கணக்கெடுப்பில் வனப்பணியாளர்கள், சூழல் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என 220 பேர் ஈடுபட்டுள்ளனர். புலிகளை நேரில் காணுதல், கண்காணிப்பு கேமராவில் பதிவாகுதல், புலிகளின் கால் தடப்பதிவு, அவற்றின் கழிவு மற்றும் எச்சம், மரங்களில் உள்ள கீறல்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இக்கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 



இது குறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் கூறுகையில், "புலிகள் இரவில் நடமாடும் விலங்குகளாகும். இதனால், அதனை பார்ப்பது என்பது அரிதான காரியமாகும். ஆனால், அவற்றின் நடமாட்டத்தை கால் தடயங்கள், எச்சம் உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். புலிகளின் அடிப்படை குணங்களை தெரிந்து கொண்டால், அவற்றைப் பற்றிய தகவல்களை சேகரிக்க எளிதாக இருக்கும்," என்றார்.



மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதியில் இன்று அதிகாலை ஆறு மணி முதல் 120 பேர் 28 குழுக்களாகப் பிரிந்து இக்கணக்கெடுப்பு பணி துவக்கினர். குறிப்பாக, நீர்நிலைகள் உள்ள பகுதிகளில் புலிகளின் காலடி தடம் மற்றும் எச்சங்களை சேகரித்து வருகின்றனர். இந்தப் புலிகள் கணக்கெடுப்பு பணி இன்று துவங்கி வரும் 11 ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. 

'கடந்த 2014-ம் ஆண்டு எடுக்கப்பட்ட புலிகள் கணக்கெடுப்பில் இந்திய அளவில் 2,226 புலிகள் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது, நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒவ்வொரு வனக்கோட்டமாக நடைபெறும் இந்த கணக்கெடுப்பின் முடிவில் தேசிய அளவில் புலிகளின் எண்ணிக்கை குறைத்துள்ளதா அல்லது அதிகரித்துள்ளதா எனத் தெரிய வரும், என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...