கோவையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்

கோவை: பீளமேடு பகுதியில் உள்ள சர்வீஸ் அபார்ட்மென்ட்டில் ரூ.60 லட்சம் மதிப்பிலான பழைய 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கோவை: பீளமேடு பகுதியில் உள்ள சர்வீஸ் அபார்ட்மென்ட்டில் ரூ.60 லட்சம் மதிப்பிலான பழைய 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பீளமேடு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சர்வீஸ் அபார்ட்மென்ட் உள்ளது. அங்கு வெங்கடேஷ் என்பவர் போக்கியத்திற்கு எடுத்திருந்த வீட்டில், தஸ்தகீர் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். 

இந்த நிலையில், இன்று காலை அவரிடம் வாடகை வசூலிப்பதற்காக வெங்கடேஷ் சென்றுள்ளார். ஆனால், அப்போது தஸ்தகீர் அங்கு இல்லை. மேலும், அங்கு கட்டு கட்டாக பழைய 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேஷ் பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்தார். 

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், ரூ. 60 லட்சம் மதிப்பிலான பழைய 1,000 நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், தஸ்தகீரின் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

முதற்கட்ட விசாரணையில் தஸ்தகீர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. அவர் யார்? எதற்காக கோவை வந்தார்? பழைய ரூபாய் நோட்டுகள் யாருடையது? என்பதெல்லாம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...