குடிச்சிட்டு பைக்ல போனாதான பிடிப்பீங்க, நாங்க சைக்கிளில் போவோம்: போலீசாரிடம் சிக்காமல் இருக்க குடிமகன்களின் புது யுக்தி!

கோவை: மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டி போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க மது அருந்துவோர் மிதிவண்டி பயன்படுத்தி புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர்.


கோவை: மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டி போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க மது அருந்துவோர் மிதிவண்டி பயன்படுத்தி புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர்.



கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குறிப்பாக செல்வபுரம், புலியகுளம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் சாலை, ஆகிய பகுதிகளில் அன்மை காலமாக டாஸ்மாக் கடை, பார் போன்ற பகுதிகளில் மிதிவண்டிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. சிலர் மது அருந்திவிட்டு மிதிவண்டியை எடுத்துச் சென்றனர்.

இது குறித்து மது வாங்க வந்த ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், "காவல்துறையின் சோதனை கோவை மாநகரம் முழுவதும் அதிகமாக உள்ளது. மது வாங்கி வீட்டிலோ அல்லது நண்பர்கள் அறையிலோ என்னால் அருந்த முடியாத சூழ்நிலை உள்ளது. பெயிண்டர் வேலை செய்யும் நான் மாலை நேரத்தில் உடல் வலிக்காக மது அருந்துகிறேன். அதுவும் பாரில் தான் அருந்த முடியும். ஆகையால் மோட்டார் பைக்கிற்கு பதிலாக மிதிவண்டியில் வந்து அருந்திவிட்டு செல்கிறேன். காவல்துறை என்னிடம் சோதனை செய்வதில்லை." என்றார்.

மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கினால் தானே பிரச்சினை, மிதிவண்டியில் வந்தால் காவல்துறையால் என்ன செய்ய முடியும் என சில மது பிரியர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.



இன்னும் சிலர் மது அருந்திவிட்டு மிதி வண்டி ஒட்டமுடியாமல் அதனை தடுமாறி தள்ளிக்கொண்டே செல்கின்றனர். இது போன்ற சம்பவங்களால் காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் அருள்ராஜ் கூறுகையில், "காவல்துறையின் நடவடிக்கையால் அனைவரும் ஓரளவு ஹெல்மட் அணிய ஆரம்பித்துவிட்டனர். குடித்துவிட்டு வண்டி ஒட்டுவதும் ஒரளவு குறைந்து விட்டது. ஆனால், தற்போது மிதிவண்டியைப் பயன்படுத்தி குடிக்க ஆரம்பித்துவிட்டனர். காவல்துறை இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.

இது குறித்து கோவை மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார் கூறுகையில், "மிதிவண்டியில் குடித்துவிட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து சட்டத்தில் இடமில்லை. அதே நேரம் அவர்கள் பொது இடங்களில் மது அருந்தினாலோ அல்லது தகராறு செய்தாலோ சட்டம் மற்றும் ஒழுங்கு துறை காவலர்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். 

தற்போது நாங்கள் குடித்துவிட்டு மிதிவண்டியில் வருபவர்களிடம் எச்சரிக்கை செய்து வருகிறோம். போக்குவரத்து சட்டத்தில் இது குறித்து மாற்றம் கொண்டு வர வேண்டும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன." என்றார்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...