திருப்பூர்: உயர்நிலைப்பள்ளியை இடமாற்றம் செய்வதை எதிர்த்து பள்ளி மாணவ-மாணவிகள் பெற்றோர்களுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போரட்டம்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதிக்குட்பட்ட அறிவொளி நகர் பகுதியில் செயல்பட்டு வந்த ஆரம்ப பள்ளி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அறிவொளி நகர் பகுதியில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அங்கு கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், அறிவொளி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியினை தற்போது மாவட்ட நிர்வாகம் 3 கிலோ மீட்டருக்கு அப்பால் மாற்றத் திட்டமிட்டுள்ளது . இதுபோண்று மாற்றும் போது குழந்தைகள் 3 கி.மீ தூரம் செல்ல வேண்டும். அதற்கான பேருந்து வசதி அதிகம் இல்லாததால் குழந்தைகள் சிரமப்படுவதோடு கல்வியும் பாதிக்கும் நிலை ஏற்படுவதால் பள்ளியை இடம் மாற்றக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பெற்றோர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து. அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.