வெள்ளியங்காடு பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைவதைத் தடுக்க கோரி பொதுமக்கள் மனு

கோவை: வாசனை திரவிய தொழிற்சாலை அமைவதைத் தடை செய்யக் கோரி வெள்ளியங்காடு பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: வாசனை திரவிய தொழிற்சாலை அமைவதைத் தடை செய்யக் கோரி வெள்ளியங்காடு பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை ஒன்றியதிற்கு உட்பட்ட வெள்ளியங்காடு கரியன்குட்டை பகுதியில் அரோமா பார்ம்ஸ் என்ற வாசனை திரவிய தொழிற்சாலை நிறுவப்பட்டு வருகிறது. இதனைத் தடை செய்யக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.



அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்பட்டால் ஆலையின் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் நிலத்தில் விடும் போது கோவை, திருப்பூர் மக்களின் குடிநீர் ஆதாரமான பில்லூர் அணை நீர் மாசு அடைவதுடன் குடிநீரை பருக முடியாத சூழ்நிலை ஏற்படும். தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் வேதிப் பொருட்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

இந்த ஆலை அமைக்கப்பட்டு வரும் பகுதி பாதுகாக்கப்பட்ட அத்திகடவு காப்புக் காடு பகுதி என்பதால் விலங்குகளின் வாழ்விடம் அழிந்து கேள்விக்குறி ஆகிவிடும். விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். மர கொதிகலன் உபயோகிக்கும் பொழுது வெளியேறும் மாசு பொதுமக்களுக்கு நோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் எடுக்கும் போது, வறட்சி காலம் மற்றும் விவசாயத்தை நம்பி உள்ளவர்கள் வாழ்வாதாரம் கேள்வி குறியாகிவிடும். எனவே, இந்த ஆலையைத் திறப்பதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்.

என்று கூறப்பட்டிருந்தது.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...