திருப்பூர்: சிறுமியை கடத்த முயன்றதாக சந்தேகத்தின் பேரில் இளைஞரை கட்டி வைத்து மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருப்புர் சின்னாண்டிபாளையம், ராஜகணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில் குமார், உமா தம்பதியர். இவர்கள் இருவரும் பனியன் கம்பனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு 10 வயதில் பெண் குழந்தை உள்ளார். இந்நிலையில், இன்று காலை தனது மகளை அழைத்துக் கொண்டு உமா காட்டுப் பகுதிக்கு சென்றார். சிறுமி தனியாக நிற்பதைப் பார்த்த இளைஞர் ஒருவர் சிறுமியை தூக்கிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்துள்ளார்.

இதனைக் கண்ட உமா கூச்சலிட்டதும், அந்த இளைஞர் சிறுமியை கிழே வீசி விட்டு தப்பியோடி அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் வீட்டிற்குள் புகுந்து அந்த இளைஞரை இழுத்து வந்து கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அவரை மீட்டு மத்திய காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் பெயர் சிவா என்பதும், கே.வி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.