சிறுமியை கடத்த முயன்றதாகக் கூறி இளைஞரை கட்டி வைத்து அடித்த திருப்பூர் மக்கள்

திருப்பூர்: சிறுமியை கடத்த முயன்றதாக சந்தேகத்தின் பேரில் இளைஞரை கட்டி வைத்து மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பூர்: சிறுமியை கடத்த முயன்றதாக சந்தேகத்தின் பேரில் இளைஞரை கட்டி வைத்து மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருப்புர் சின்னாண்டிபாளையம், ராஜகணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில் குமார்,  உமா தம்பதியர். இவர்கள் இருவரும் பனியன் கம்பனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களுக்கு 10 வயதில் பெண் குழந்தை உள்ளார். இந்நிலையில், இன்று காலை தனது மகளை அழைத்துக் கொண்டு உமா காட்டுப் பகுதிக்கு சென்றார். சிறுமி தனியாக நிற்பதைப் பார்த்த இளைஞர் ஒருவர் சிறுமியை தூக்கிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்துள்ளார்.



இதனைக் கண்ட உமா கூச்சலிட்டதும், அந்த இளைஞர் சிறுமியை கிழே வீசி விட்டு தப்பியோடி அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் வீட்டிற்குள் புகுந்து அந்த இளைஞரை இழுத்து வந்து கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.



இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அவரை மீட்டு மத்திய காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் பெயர் சிவா என்பதும், கே.வி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...