கோவை: சிவகங்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்ததால் தாழ்த்தப்பட்ட மக்கள் மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ் புலிகள் கட்சியினர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கச்ச நத்தம் கிராமத்தில் வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் மூவர் உயிரிழந்தனர். தேநீர் கடையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்ததாக கூறி இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில், கோவையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், குறிப்பாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் தமிழ் புலிகள் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பாக நாற்காலியில், கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த காவல் துறையினர் அவர்களிடம் இருந்த நாற்காலியை எடுத்து வைத்தனர். பின்னர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து மனு அளித்தனர்.