தனியார் தொழிற்சாலையால் பாதிப்பு: கோவை மக்கள் ஆட்சியரிடம் புகார்

கோவை: தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கருமண் மூலம் பாதிப்பு ஏற்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மலுமிச்சம்பட்டி பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கருமண் மூலம் பாதிப்பு ஏற்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மலுமிச்சம்பட்டி பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை அடுத்த மலுமிச்சம்பட்டி ராஜகணபதி நகர், ரேவதி நகர், மற்றும் திருவள்ளுவர் நகர் அமைந்துள்ள பகுதியில் பி.சி அண்டு சன்ஸ் என்ற தனியார் பவுண்டரி செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து கரும்புகையுடன் கலந்து கருப்பு மண் வெளியேறுவதாக கூறப்படுகிறது.



அந்த மண் நச்சுத் தன்மை கொண்டதாக இருப்பதால், சுவாச கோளாறு, தோல் நோய், அரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.



இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், "இந்த பவுண்டரி குறித்து இதுவரை 11 துறைகளுக்கு மனு அளித்துள்ளோம். கடந்த மாதம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இதனை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாசு கட்டுப்பாட்டை தவிர்க்க பவுண்டரி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை உறுதி செய்து விட்டுச் சென்றனர். இதன் பிறகும் அதை சரி செய்யும் முயற்சியில் பவுண்டரி நிர்வாகம் ஈடுபடாமல் தொடர்ந்து இயங்கி வருகிறது.

உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மாசு கட்டுப்பாட்டு கருவி பொருத்திய பின்னர் பவுண்டரியை இயக்க அனுமதிக்க வேண்டும்." என்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...