டெல்லி: நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 6-ம் தேதி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து 1.07 லட்சம் பேரும் நாடு முழுவதும் 13 லட்சம் பேரும் இந்த தேர்வை எழுதினர்.
நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வு முடிவுகளை cbseneet.nic.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் முதல் மதிப்பெண் 691 என்றும் தகவல் வெளியாகியுள்ளது.