சென்னை: எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானியம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதாக சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு 67 பேர் விடுதலை செய்யப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த கருணை அடிப்படையிலான விடுதலையில், ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் மற்றும் நளினி ஆகியோர் விடுதலை செய்யப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.