வால்பாறை: வால்பாறை பகுதியில் சிறுத்தை தாக்கி பெண் தொழிலாளி படுகாயமடைந்தார்.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது சின்கோனா தேயிலை தோட்டம். தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்திற்கு சொந்தமான இந்த தோட்டத்தில் சந்திரமதி (45) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு 7 மணியளவில் வீட்டின் பின்புறம் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த புதரில் பதுங்கி இருந்த சிறுத்தைப் புலி திடீரென பாய்ந்து அவரை பின்பக்கமாக தாக்கியது. இதனால் அவர் சத்தம் போட்டபடி கீழே விழுந்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த மக்கள் ஓடி வரவே சிறுத்தை அவரை விட்டு விட்டு ஓடியது.
பின்னர், சந்திரமதியை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேற்கொண்டு தீவிர சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கடந்த வாரம் அதே பகுதியில் சிறுத்தைப் புலி தாக்கியதில் 11 வயது மாணவி படுகாயம் அடைந்தார். இந்த சூழலில் மீண்டும் அதே போன்ற சம்பவம் நடைபெற்ற காரணத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும், கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்கக் கோரிக்கை வைத்துள்ளனர்.