ஏ.டி.எம் மையத்தில் தீ விபத்து: பல லட்சம் ரொக்க பணம் தப்பியது

கோவை: மேட்டுப்பாளையம் அருகே ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஏ.டி.எம் மையத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஏ.டி.எம் மையத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த அன்னூரில் சக்தி சாலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. பிரதான சாலையின் முன்பு உள்ள இந்த வங்கியின் கட்டிடத்தின் கீழ் பகுதியில் ஏ.டி.எம் மெசின் அமைந்துள்ளது. 

இந்நிலையில், நேற்று இரவு ஏ.டி.எம் மெசினில் இருந்து திடீரென கரும்புகை வருவதைக் கண்ட ஏ.டி.எம் காவலாளி உடனடியாக சுதாரித்து அன்னூர் தீயணைப்பு நிலையத்திற்கும் காவல் துறைக்கும் தகவல் அளித்தார். தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு மெசினின் பின் பகுதியில் பற்றிய தீயை அனைத்தனர்.



இதனால் ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் ரொக்க பணம் சேதமாவது தடுக்கப்பட்டது. தொடர்ந்து காவல்துறை சார்பில் நடைபெற்ற விசாரணையில் மின் அழுத்தம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...