ஒப்பந்த ஊழியர் பலியான சம்பவம்: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

திருப்பூர்: திருப்பூர் அருகே பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஒப்பந்த ஊழியரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஒப்பந்த ஊழியரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



உடுமலை அருகே சாலைப்புதூர் பகுதியில் புதிய மின் கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியர் மாசனி (42) மின்சாரம் தாக்கி நேற்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை பார்க்க மின்வாரிய உயர் அதிகாரிகள் வராததைக் கண்டித்தும், அவரது குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கக் கோரியும் உடுமலை அரசு மருத்துவமனையில் மாசானியின் உடலை வாங்க மறுத்து ஒப்பந்த ஊழியர்கள், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து ஒப்பந்த தொழிலாளர் நாகராஜ் கூறுகையில், "அதிகாரிகளின் அலட்சியத்தால் மின்சாரம் சரியாக நிறுத்தப்படாமல், எங்களுடன் பணியாற்றிய மாசனி என்பவர் பலியானார். அவரது உடலைப் பார்க்க கோவை மண்டத்திலிருந்து மின்வாரிய உயர் அதிகாரி ஒருவராவது வரவேண்டும். மாசனியின் குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் வேலைவாய்ப்பு அளிக்க உறுதி கொடுக்க வேண்டும். இச்சம்பவத்திற்கு காரணமான அதிகாரியை போலீசார் கைது செய்ய வேண்டும். இல்லையெனில், உடலை வாங்க மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்," என்றார்.



மாசனியின் உடல் உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில், ஐநூறுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் உடுமலை அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...