சமூக விரோதிகள் போலீசாரை தாக்கியதே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் - ரஜினிகாந்த்

சென்னை: ஸ்டெர்லைக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் போலீசாரை தாக்கியதே துப்பாக்கிச் சூடு நடைபெற காரணம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை: ஸ்டெர்லைக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் போலீசாரை தாக்கியதே துப்பாக்கிச் சூடு நடைபெற காரணம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களை நடிகர் இன்று நேரில் சந்தித்தார். தொடர்ந்து சென்னை சென்ற அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து போராட்டத்தை சீர்குலைத்தனர். அதே போலத்தான், ஸ்டெர்லைட் போராட்டத்திலும் சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர். அதனால் தான் வன்முறை வெடித்தது.

முதலில் அவர்கள் தான் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். அது தான் இந்த பிரச்சினைக்கு காரணம். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால், தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்." என்றார். 

பாத்தீங்களா? 

ரஜினியின் இந்த பேச்சை தொடர்ந்து, செய்தியாளர்கள் "சமூக விரோதிகள் புகுந்துவிட்டத்தை நீங்கள் பார்த்தீர்களா?" என்ற கேள்வியெழுப்பினர். அதற்கு, "எனக்கு தெரியும்" என்று ஆவேசமாக பதிலளித்து சென்றார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...