கோவை அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் மற்றும் அவரது மனைவி மீது சொத்துகுவிப்பு வழக்கு

கோவை: வருமானத்திற்கு அதிகமாக ரூ. 90 லட்சம் வரையில் சொத்து சேர்த்ததாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பேராசிரியர் மற்றும் அவரது மனைவி அரசுப் பொறியாளர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: வருமானத்திற்கு அதிகமாக ரூ. 90 லட்சம் வரையில் சொத்து சேர்த்ததாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பேராசிரியர் மற்றும் அவரது மனைவி அரசுப் பொறியாளர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை துறை பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் இளங்கோ. இவரது மனைவி மல்லிகா தேசிய நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளராக இருக்கின்றார். பேராசிரியர் இளங்கோ கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தபடி, குனியமுத்தூர் பகுதியில் 'மல்லிகா நர்சிங் ஹோம்' என்ற பெயரில் தனியாக மருத்துவமனை ஒன்றையும் நடத்தி வருகின்றார்.



அரசு ஊழியர்களான இளங்கோ மற்றும் அவரது மனைவி மல்லிகா ஆகிய இருவரும் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து 2013-ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ. 90,51,269 அளவிற்கு சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில், அதிகமான சொத்துக்களை வாங்கியதற்கான ஆவணங்கள் ஏதுமில்லை. இதையடுத்து, பேராசிரியர் இளங்கோ மற்றும் அவரது மனைவி மல்லிகா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...