குழந்தை பாதுகாப்புச் சட்டம் மற்றும் மனநலம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி பட்டறை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் குழந்தைகள் மனநலம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் குழந்தைகள் மனநலம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் அமிர்தா பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இந்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறையை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். 

இந்தப் பயிற்சி பட்டறையில் காவல் துறை அதிகாரிகள், நீதித்துறை நடுவர்கள், அரசு வழக்கறிஞர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பின் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 



இந்தப் பயிற்சி பட்டறையில் குழந்தைகள் சார்ந்த சட்டங்களான, இளைஞர் நீதி சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் போன்றவற்றில் கூறப்பட்டுள்ள முக்கிய சாரம்சங்கள் பற்றி பயிற்சியாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா, தேசிய குழந்தை உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் ரூபா கபூர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பயிற்சி பட்டறையைத் தொடர்ந்து, தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளின் நலன் குறித்தும், அனைத்து தேயிலை தோட்டங்களில் பிங்க் கழிவறைகள் அமைப்பது பற்றியும் நாளை ஆய்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...