கோவை: கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சூடு வைத்து கொடுமை செய்ததாகப் பக்கத்து வீட்டுக்காரர் மீது பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.

பூமார்கெட் அருகே உள்ள தெப்பக்குளத்தில் வசித்து வருபவர் சூர்யபிரகாஷ், பெரியமுத்து தம்பதியின் மகன் அரவிந்த் (12). மனநலம் பாதிக்கப்பட்ட இவர், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர்கள் வீட்டுக்கு முன்பு வசித்து வருபவர் செல்வராணி. இவர் மனநலம் பாதிக்கப்பட்ட அரவிந்தின் முகத்தில் சூடு வைத்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல, தொடர்ந்து, தனது மகனைக் கொடுமை செய்து வந்ததாகக் கோவை ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் அவர்களை அழைத்து விசாரிக்காமல் அதனை விட்டுவிடச் சொல்லி சமாதானம் தெரிவித்துள்ளனர்.
இதனால், அதிருப்தியடைந்த அரவிந்தின் பெற்றோர்கள், செல்வராணியின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.