கோவை: கரூர் - திருச்சி இடையே உள்ள ரயில் நிறுத்தங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் கட்டுமானப் பணிகள் காரணமாக திருச்சிக்கு செல்லும் ரயில்களின் நேரம் 29-ம் தேதி மட்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், குளித்தலை - பேட்டவைதலை இடையே உள்ள ரயில் நிறுத்தங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் கட்டுமானப் பணிகள் காரணமாக திருச்சி செல்லும் ரயில்களின் நேரம் ஒருதினத்திற்கு (மே 29) மட்டும் மாற்றியமைக்கப்பட்டது.
இதன் காரணமாக, ரயில் எண் (56712) பாலக்காடு டவுன் - திருச்சி பயணிகள் ரயில் திருப்பூர் - கரூர் பகுதிகளில் சுமார் 135 நிமிடம் நிறுத்தப்படும். இதனால், திருச்சிக்கு 2 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக ரயில் சென்றடையும்.
இதேபோல, ரயில் எண் (56713) திருச்சி - பாலக்காடு பயணிகள் ரயிலானது, மதியம் 1.00 மணிக்கு பதிலாக 2.00 மணிக்கு திருச்சி ரயில்நிலையத்தில் இருந்து புறப்படும். மேலும், முத்தரசனல்லூர் மற்றும் பேட்டவைதலை இடையே சுமார் 25 நிமிடங்கள் ரயில் நிறுத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.