தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன்- தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹிரேமாணி

கோவை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹிரேமாணி தெரிவித்துள்ளார்.

கோவை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹிரேமாணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் நபர்கள் குறித்து எடுக்கப்பட்ட சர்வே சம்பந்தமான ஆய்வு கூட்டத்தில் தேசிய தூய்மைப் பணியாளர் நல ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹிரேமணி கலந்து கொண்டார். 



இதனிடையே, கடந்த டிசம்பர் 22-ம் தேதி பத்மராஜா தங்க நகை தயாரிக்கும் தொழிற்சாலையில் மூன்று பேர் இறந்த இடத்தை இன்று காலை ஆய்வு செய்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,  "துப்புரவு பணியாளர்களின் உயர்த்தப்பட்ட சம்பளத்தை இதுவரை அதிகாரிகள் வழங்கப்படாதது குறித்து அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவுள்ளேன். 

ஒப்பந்ததாரர்கள் துப்புரவு பணியாளர்களின் சம்பளத்தில் பாதி எடுத்துவிடுவது குறித்த புகாரின் அடிப்படையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களில் 500 பேருக்கு ஒரு துப்புரவு பணியாளர் என மத்திய அரசிடம் தூய்மைப் பணியாளர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மனித கழிவுகளை அள்ளுவதற்கு கேரள அரசு எடுத்திருக்கும் முயற்சி வெற்றியடைந்தால் நாடு முழுவதும் விரிவு படுத்தப்படும்.

தூத்துக்குடி சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இந்த சம்பவத்தில் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மாநில அரசு விசாரணைக் குழுவை அமைத்து ஏன் எப்படி நடந்தது? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

இரண்டு நாட்கள் கழித்து  நேரடியாக  தூத்துக்குடி சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளேன். மாநில அரசின் அறிக்கை வந்தபின் தான் முழுமையாகத் தெரியும். இந்த சம்பவம் நடந்திருக்கக்கூடாது." என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...