கோவை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹிரேமாணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் நபர்கள் குறித்து எடுக்கப்பட்ட சர்வே சம்பந்தமான ஆய்வு கூட்டத்தில் தேசிய தூய்மைப் பணியாளர் நல ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹிரேமணி கலந்து கொண்டார்.

இதனிடையே, கடந்த டிசம்பர் 22-ம் தேதி பத்மராஜா தங்க நகை தயாரிக்கும் தொழிற்சாலையில் மூன்று பேர் இறந்த இடத்தை இன்று காலை ஆய்வு செய்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "துப்புரவு பணியாளர்களின் உயர்த்தப்பட்ட சம்பளத்தை இதுவரை அதிகாரிகள் வழங்கப்படாதது குறித்து அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவுள்ளேன்.
ஒப்பந்ததாரர்கள் துப்புரவு பணியாளர்களின் சம்பளத்தில் பாதி எடுத்துவிடுவது குறித்த புகாரின் அடிப்படையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களில் 500 பேருக்கு ஒரு துப்புரவு பணியாளர் என மத்திய அரசிடம் தூய்மைப் பணியாளர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மனித கழிவுகளை அள்ளுவதற்கு கேரள அரசு எடுத்திருக்கும் முயற்சி வெற்றியடைந்தால் நாடு முழுவதும் விரிவு படுத்தப்படும்.
தூத்துக்குடி சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இந்த சம்பவத்தில் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மாநில அரசு விசாரணைக் குழுவை அமைத்து ஏன் எப்படி நடந்தது? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இரண்டு நாட்கள் கழித்து நேரடியாக தூத்துக்குடி சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளேன். மாநில அரசின் அறிக்கை வந்தபின் தான் முழுமையாகத் தெரியும். இந்த சம்பவம் நடந்திருக்கக்கூடாது." என்றார்.