திருவனந்தபுரம்: பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் இந்த நிலையில், பிரதமர் மோடி பிட்னஸ் சேலஞ் எடுத்திருப்பதைக் கண்டித்து கேரள மக்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர்.

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. விலையைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசுக்கு எதிராக தேசிய அளவில் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், கிரிக்கெட் வீரர் வீராத் கோலி சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சவால் விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, கோலியின் சவாலை ஏற்றதாகவும், விரைவில் தானும் உடற்பயிற்சி செய்து வீடியோ வெளியிடுவேன் என்றும் மோடி அறிவித்திருந்தார். மோடியின் இந்த செயல் எந்த அளவிற்கு வைரல் ஆனதோ அதைவிட அதிக அளவு பிரச்சனைகளை சந்தித்தது.
முக்கியமாக நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகமாகிக் கொண்டே இருக்கும் நிலையில் மோடி இப்படி நடந்து கொள்வது மக்களுக்கு கோபத்தை உண்டாக்கியது. கேரளாவில் மக்கள் இதற்கு வித்தியாசமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெட்ரோல் விலை உயர்வு, பிட்னஸ் சேலஞ்ச் இரண்டையும் கண்டிக்கும் விதத்தில், மோடிக்கு எதிரான வாசகம் அடங்கிய பதாகைகளுடன் பெட்ரோல் பங்குகளில் போராடி இருக்கிறார்கள்.
அதோடு பிட்னஸ் சேலஞ்சை கிண்டல் செய்யும் விதமாக, பெட்ரோல் பங்கில் உடற்பயிற்சி செய்து உள்ளனர். மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பியபடியே அவர்கள் உடற்பயிற்சி செய்து போராட்டம் செய்துள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.