பெட்ரோல் விலை இப்படி எகிற, பிட்னஸ் சேலஞ் கேக்குதா?: பிரதமரை கலாய்த்த கேரள மக்கள்

திருவனந்தபுரம்: பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் இந்த நிலையில், பிரதமர் மோடி பிட்னஸ் சேலஞ் எடுத்திருப்பதைக் கண்டித்து கேரள மக்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர்.

திருவனந்தபுரம்: பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் இந்த நிலையில், பிரதமர் மோடி பிட்னஸ் சேலஞ் எடுத்திருப்பதைக் கண்டித்து கேரள மக்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர்.

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. விலையைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசுக்கு எதிராக தேசிய அளவில் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில்,  கிரிக்கெட் வீரர் வீராத் கோலி சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சவால் விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, கோலியின் சவாலை ஏற்றதாகவும், விரைவில் தானும் உடற்பயிற்சி செய்து வீடியோ வெளியிடுவேன் என்றும் மோடி அறிவித்திருந்தார். மோடியின் இந்த செயல் எந்த அளவிற்கு வைரல் ஆனதோ அதைவிட அதிக அளவு பிரச்சனைகளை சந்தித்தது.

முக்கியமாக நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகமாகிக் கொண்டே இருக்கும் நிலையில் மோடி இப்படி நடந்து கொள்வது மக்களுக்கு கோபத்தை உண்டாக்கியது. கேரளாவில் மக்கள் இதற்கு வித்தியாசமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெட்ரோல் விலை உயர்வு, பிட்னஸ் சேலஞ்ச் இரண்டையும் கண்டிக்கும் விதத்தில், மோடிக்கு எதிரான வாசகம் அடங்கிய பதாகைகளுடன் பெட்ரோல் பங்குகளில் போராடி இருக்கிறார்கள்.

அதோடு பிட்னஸ் சேலஞ்சை கிண்டல் செய்யும் விதமாக, பெட்ரோல் பங்கில் உடற்பயிற்சி செய்து உள்ளனர். மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பியபடியே அவர்கள் உடற்பயிற்சி செய்து போராட்டம் செய்துள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...