குடிநீர் குழாயில் உடைப்பு: தடாகம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு

கோவை: தடாகம் சாலையில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


கோவை: தடாகம் சாலையில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆர்.எஸ்.புரத்தை அடுத்துள்ள தடாகம் பிரதான சாலையில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் இன்று காலை திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. இதனால், அதிக அளவில் குடிநீர் வெளியேறி சாலையை ஆக்கிரமித்தது. சாலையின் இருபுறமும் தண்ணீர் குட்டை போல் தேங்கியதால் குறுகிய இடத்தில் பொதுமக்கள் வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.



இதனால் தடாகம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெரும்பாலான வாகனங்கள் மேட்டுப்பாளையம் சாலையை நோக்கி திரும்பின. இதனால் மேட்டுப்பாளையம் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமானது. பின்னர் தடாகம் சாலைக்கு வந்த காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.

இதனை தொடர்ந்து, உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...