கோவை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று வெளியாகியுள்ள நிலையில், கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது தெரியவந்தது.
கோவை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று வெளியாகியுள்ள நிலையில், கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது தெரியவந்தது.
இன்று வெளியான தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தமிழகத்தில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவையைப் பொறுத்தவரையில் 95.86 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை கோவை மாவட்டத்தில் மொத்தம் 40,307 பேர் எழுதிய நிலையில், 38,638 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 96.42 இருந்தது. ஆனால், இந்த ஆண்டு 95.86 சதவீதமாக தேர்ச்சி விகிதம் உள்ளது. இது கடந்த ஆண்டை விட 0.56 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.