குண்டும், குழியுமான மேட்டுப்பாளையம் மலைக்கிராம சாலைகள்: மருத்துவ அவசரத்திற்கு கூட வாகனங்களில் செல்ல முடியாத நிலை

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரத்திற்குட்பட்ட மலைக்கிராமங்களில் உள்ள 90 கி.மீ. தூர சாலைகள் பயணிக்கவே தகுதியற்ற நிலையில் இருப்பதால், மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு கூட வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரத்திற்குட்பட்ட மலைக்கிராமங்களில் உள்ள 90 கி.மீ. தூர சாலைகள் பயணிக்கவே தகுதியற்ற நிலையில் இருப்பதால், மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு கூட வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் உள்ள வெள்ளியங்காடு என்னும் இடத்தில் இருந்து பில்லூர் அணை அமைந்துள்ள பரளிக்காடு வரை செல்லும் சாலையில் பூச்சமரத்தூர், தோண்டை, வேப்பமரத்தூர், வீரக்கல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. சுமார் 60 கி.மீ. நீளமுள்ள இச்சாலையின் வழியே நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கும் சென்றடையலாம். எனவே, உள்ளூர் மலைவாழ் பழங்குடியின மக்கள் மட்டுமின்றி சுற்றுலா செல்வோர் மற்றும் இதர வர்த்தக பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் இவ்வழியே சென்று வருகின்றன.



இதேபோல, தோலம்பாளையம் பகுதியில் இருந்து கோப்பனாரி வரை மலைக்கிராமங்கள் வழியே செல்லும் சுமார் 40 கி.மீ., தொலைவுள்ள சாலை வழியே கேரள மாநிலத்திற்கு செல்ல முடியும் என்பதால், போக்குவரத்து மிகுந்தே காணப்படுகிறது. ஆனால், இச்சாலைகள் முழுவதுமாக பழுதடைந்து குண்டும், குழியுமாக வாகனங்கள் கடந்து செல்லவே இயலாத வகையில் காணப்படுகின்றன. அடர்ந்த மலைக்காட்டின் வழியே செல்லும் இச்சாலையில் சென்றால் வாகனங்கள் பழுதடைந்து நின்று விடும் அல்லது விபத்துக்கள் ஏற்படும் என இப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், கல்வி பயில செல்லும் கிராம மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவது மட்டுமின்றி, அவசர மருத்துவ தேவைகளுக்காக கூட இச்சாலையைப் பயன்படுத்த முடியவில்லை என்கின்றனர்.

இது குறித்து கிராம மக்கள் சார்பில் பல முறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் பலனில்லை என புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் கேட்ட போது, “இச்சாலையினை புதுப்பிக்க வனத்துறையினரின் அனுமதி தேவைப்படுகிறது. முறையான அனுமதி கிடைக்காததின் காரணமாகவே சாலை சீரமைப்பு பணிகள் தாமதமாகிறது” எனக் கூறினர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள மலைக்கிராமங்களை இணைக்கும் சாலைகள் அனைத்தும் பயணிக்கவே இயலாத வகையில் பழுதடைந்து, பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை செப்பனிடப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் இப்பகுதி மக்கள்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...